» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: தலைமறைவாக இருந்த மருத்துவ மாணவர் குடும்பத்தாருடன் கைது

புதன் 25, செப்டம்பர் 2019 5:23:03 PM (IST)

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த புகாரில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த மாணவர் உதித் சூர்யா குடும்பத்தாருடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா, இந்தாண்டு தேனி அருகேயுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துப்படிப்பில் சேர்ந்தார். ஆனால், அவர் நீட் தேர்வு எழுதாமல், அவருக்கு பதிலாக மும்பையில் வேறு ஒருவர் நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர் கடந்த 2019-2020 ஆகிய கல்வியாண்டுக்கான மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது உறுதியானது. இதற்கிடையில், உதித்சூர்யா, அவரது குடும்பத்துடன் தலைமறைவானார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை முடித்துவிட்டு உதித் சூர்யாவை தேனிக்கு கொண்டு செல்ல போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் தர சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது. உதித் சூர்யாவை போலீசில் ஆஜராகும்படி அறிவுரை கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory