» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாடகைதாரர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் : டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

வியாழன் 26, செப்டம்பர் 2019 10:49:40 AM (IST)

டெல்லியில் வசிக்கும் வாடகை தாரர்களுக்கு இனி 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கான மின் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை முதல்வர் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.  இதுதொடர் பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லியில் வசிக்கும் வாடகை தாரர்களுக்கு இனி 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக, அவர்கள் வசிக்கும் வீடுகளில் புதிய ப்ரீ-பெய்ட் மின்சார மீட்டர் பொருத்தப்படும். இந்த மீட்டரானது, 200 யூனிட் மின்சாரத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory