» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பணக்காரர்கள் பட்டியல்: தொடர்ந்து 8-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

வியாழன் 26, செப்டம்பர் 2019 11:18:35 AM (IST)

இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8 -ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். ரூ. 1.86 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எஸ்.பி. ஹிந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். ரூ. 1.17 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். 

அதற்கு அடுத்தபடியாக, ஆர்செலார்மிட்டல் நிறுவனத்தின் சிஇஓ லட்சுமி மிட்டல், ரூ. 1.07 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4 ஆவது இடத்திலும், ரூ. 94 ஆயிரத்து 500 கோடி சொத்து கோடி மதிப்புடன் கெளதம் அதானி 5 ஆவது இடத்திலும் உள்ளனர். அதையடுத்து, உதய் கோட்டக் (ரூ. 94,100 கோடி), சைரஸ். எஸ். பூனாவாலா(ரூ. 88,800 கோடி), பலோஞ்சி மிஸ்திரி (ரூ. 76,800 கோடி), ஷாபூர் பலோஞ்சி, திலீப் சிங்வி (ரூ. 71,500 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்துமதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ. 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக  உள்ளது. 

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 26 சதவீதம் பேர், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிப்பவர்களாக உள்ளனர். மேலும், 82 வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். 152 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.  "ஹெச்சிஎல் இயக்குநர் ரோஷினி நாடார், இந்தியாவின் பணக்காரப் பெண்களில் முதலிடத்தில் உள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனங்கள் கூறுகையில், "இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை இதைவிட 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory