» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார சரிவில் இருந்து மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் - ப.சிதம்பரம்

வியாழன் 26, செப்டம்பர் 2019 4:21:21 PM (IST)

"தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்" என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் நாள்தோறும் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியும், அவரை புகழ்ந்தும் ப.சிதம்பரம் சார்பில் இன்று கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வாழ்த்துகிறேன். மன்மோகன் சிங்கின் அறிவுரையை இந்த அரசு கேட்க வேண்டும். தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்டு சரியான வழியை ஒருவரால் காட்ட முடியும் என்றால் அது மன்மோகன் சிங் ஒருவரே. பொருளாதார சரிவுக்கான முக்கிய காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் அடிப்படை தவறாகும்.இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை இன்று அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்திசிதம்பரம் சந்தித்தார். வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது "மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எனது தந்தை, டி.சிவக்குமார் ஆகியோருக்கு எதிராக எந்த கோர்ட்டும் இதுவரை குற்றவாளி என்று கூறவில்லை” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory