» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனி 28, செப்டம்பர் 2019 12:12:16 PM (IST)

கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் கேட்டது. இதையடுத்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. இந்நிலையில், கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory