» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டி

சனி 28, செப்டம்பர் 2019 4:16:33 PM (IST)

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இந்த தொகுதியில் ஆளுங்கட்சி காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால் அந்த கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜான்குமார் என்பவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.  ஜான்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி வகித்துள்ளார். புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்காக, நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory