» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வைகோ தாக்கல் செய்த ஃபரூக் அப்துல்லா மீதான ஆள்கொணர்வு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

திங்கள் 30, செப்டம்பர் 2019 12:46:41 PM (IST)

வைகோ தாக்கல் செய்த ஃபரூக் அப்துல்லா மீதான ஆள்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆள்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், அந்த மாநில நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வைகோ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆள்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory