» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,200 கோடி நிதி : மத்திய அரசுக்கு எடியூரப்பா நன்றி

சனி 5, அக்டோபர் 2019 3:48:19 PM (IST)

வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழையால் நாட்டின் பல மாநிலங்களில் பெருத்த சேதம் விளைந்தது. இதைத்தொடர்ந்து மாநிலங்களில் நடந்து வரும் நிவாரண பணிகளை உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார். இதில் கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கர்நாடகாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1200 கோடியும், பீகார் மாநிலத்துக்கு முன்கூட்டிய ஒதுக்கீடாக 2 தவணையில் ரூ.613.75 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் "தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முன்பணமாக ரூ 1,200 கோடியை மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. கர்நாடக மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.  அதேவேளையில், கர்நாடக காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்துள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.3200 கோடி நிதி ஒதுக்கக் கோரிய நிலையில், வெறும் 1,200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory