» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் 6ம் நாள்: தங்க வாகனத்தில் சுவாமி வீதி உலா!!

சனி 5, அக்டோபர் 2019 5:15:46 PM (IST)திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி அனுமன் தங்க வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகத்துடன் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் வீதிஉலா வந்தார். இன்று காலை ராமருக்கு சேவை செய்த பக்தனான அனுமனின் சேவையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் மலையப்பசுவாமி, அனுமன் வாகனத்தில், ராமர் அலங்காரத்தில் 4 மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

மாடவீதிகள் தோறும் திரளான பக்தர்கள் காத்திருந்து உற்சவரை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஆடியபடியும், சுவாமி அவதாரங்கள் போல் வேடமிட்டு நடனமாடியும் வீதி உலாவில் பங்கேற்றனர். மாட வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று மாலை, 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தயார்களுடன் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாடவீதியில் வலம் வரும் வைபவம் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory