» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சனி 5, அக்டோபர் 2019 7:40:59 PM (IST)

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ​

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமலாக்கத் துறையால் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்ப்பட்டு விசாரணைக் கைதியாக திகார் ஜெயிலில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இருந்து வந்தார்.கடந்த அக்டோபர் 3ஆம் தேதியுடன் காவல் முடிவுக்கு வரவிருந்த நிலையில், மீண்டும் அக்.17 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறையிலிருந்த ப. சிதம்பரம் தற்போது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஒரு மாதத்திற்கும் மேலா, திகார் சிறையில் இருந்துவந்த ப.சிதம்பரம் தற்போது உடல்நலக்கோளாறால் இவ்வாறு அனுமதிக்கப்ப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory