» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

34 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் இந்திய குடியுரிமைப் பெற்ற பாகிஸ்தான் பெண்

ஞாயிறு 6, அக்டோபர் 2019 12:05:58 PM (IST)

இந்தியரை திருமணம் செய்து 34 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்னுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சுபைதா பேகம் கடந்த 1985-ஆம் ஆண்டு இந்தியரை திருணம் செய்துகொண்டு இந்தியாவில் குடியேறினார். இந்நிலையில், 1994-ஆம் ஆண்டுடன் அவருடைய நீண்ட நாள் விசா (7 வருடங்கள்) முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்தியக் குடியுரிமைப் பெற அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், 34 வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் சுபைதா பேகம்-க்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை வேண்டி தில்லி முதல் லக்னோ வரை நாங்கள் இருவரும் அலைந்து திரிந்துவிட்டோம். தற்போது இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சுபைதா பேகம் கூறினார். இதுதொடர்பாக அப்பகுதி உளவுப் பிரிவு ஆய்வாளர் நரேஷ் கூறுகையில், கடந்த 1985-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்தவரை சுபைதா பேகம் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் 7 ஆண்டுகளில் அவரது விசா காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 1994-ஆம் இந்தியக் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவரது நன்நடத்தை காரணமாக தற்போது அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory