» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 நாட்களில் திருமண பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் ரத்து

செவ்வாய் 8, அக்டோபர் 2019 8:53:02 AM (IST)

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 நாட்களில் திருமண பதிவு  செய்யாவிட்டால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்  இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணத்தை 30 நாட்களுக்குள் இந்தியாவில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் இந்திய திருமனப் பதிவுச் சட்டத்தை மீறியதாக கருதப்படுவார். இந்திய சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் திருமண மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா வெளியுறவுத் துறையின் எம்பிக்கள் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது நிலைக்குழு  அந்த மசோதாவை பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மசோதா சட்டமானால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் திருமணம் தொடர்பாக நீதிமன்றங்களில் பிரச்சனை எழுப்பப்படும் பட்சத்தில், அவர்களுடைய அசையாச் சொத்துக்கள், அசையும் சொத்துக்கள் ஆகியவற்றை நீதிமன்றம் முடக்க உத்தரவிட வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் தேடப்படும் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிக்கவும் வாய்ப்பு உருவாகிறது. .அதனடிப்படையில் அந்த வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மசோதா பற்றிய இந்த விவரங்கள் அனைத்தும் மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory