» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சாவின் சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம்

செவ்வாய் 8, அக்டோபர் 2019 4:13:40 PM (IST)இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சா சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம் நடைபெற உள்ளது. 

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரியும், ஆடை வடிமைப்பாளருமான அனம் மிர்சா வரும் டிசம்பர் மாதம் முகமது அசாதுதீன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனின் மகன் ஆவார். இந்த தகவலை சானியா மிர்சா ஒரு பேட்டியின் போது கூறினார்.

சனம் மிர்சா மற்றும் அசாதுதீன் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையதளத்தில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது திருமணம் குறித்த விவரங்களை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory