» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை

செவ்வாய் 8, அக்டோபர் 2019 4:58:33 PM (IST)

தெலங்கானாவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார். 

தெலங்கானாவில் 2வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரசகேர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு பஸ் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்தார் முதல்வர். போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்த வழங்க வேண்டும். புதிய பணியாட்கள் நியமனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அனைவரும் பணிக்கு திரும்புமாறு சனிக்கிழமை மாலை வரை அரசு தரப்பில் இறுதி கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் ஸ்டிரக்கை கைவிடவில்லை. இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஸடிரைக்கில் ஈடுபட்ட 48, 000 பேரை மொத்தமாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். மேலும் நிலைமையை சமாளிக்க அரசு பஸ்களை லீசுக்கு விடுவது என்றும், 4 ஆயிரம் தனியார் பஸ்களுக்கு கூடுதல் அனுமதியும் வழங்கியுள்ளார் முதல்வர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory