» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழப்பு : நவராத்திரி விழாவில் சோகம்

புதன் 9, அக்டோபர் 2019 10:44:31 AM (IST)

ராஜஸ்தானில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தானில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது.  இதனை அடுத்து பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன.  இதற்காக திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. 

இதன்பின் ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.இதில் தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory