» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரு சிறையில் போலீசார் திடீர் சோதனை: கைதிகள் அறைகளில் 37 கத்திகள் பறிமுதல்

புதன் 9, அக்டோபர் 2019 4:00:52 PM (IST)



பெங்களூரு சிறைச்சாலையில் இன்று நடத்தப்பட்ட சோதனையின்போது, கைதிகளின் அறைகளில் இருந்து 37 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று சிறைக்கு சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 37 கத்திகள், கஞ்சா புகைக்கும் கருவிகள், செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதிகளுக்கு இந்த பொருட்களை சப்ளை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory