» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி: 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது

ஞாயிறு 13, அக்டோபர் 2019 10:05:11 PM (IST)

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பணம், 2 செல்போன்களை பறித்துச் சென்றவரை 24 மணிநேரத்தில் கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் பிரகலாத் மோடி. இவரின் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸ் நகரில் இருந்து டில்லிக்கு நேற்று சென்றார். வடக்கு டில்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்து இருந்தார். இதற்காக பழைய டில்லி ரயில் நிலையத்திலிருந்து அங்கு ஆட்டோவில் சென்றார். இறங்க வேண்டிய இடம் வந்ததும் தமயந்தி பென் மோடி ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி உள்ளார்.

அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் தமயந்தி பென்னிடம் இருந்த கைப் பையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வழிப்பறி செய்யப்பட்ட அந்த கைப் பையில் சுமார் 56,000 ரூபாய், 2 செல்போன், டெபிட் கார்ட், மற்றும் விமான பயணம் மேற்கொள்வதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்தன. வழிப்பறியை அடுத்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தமயந்தி பென் உடனடியாக புகார் கொடுத்தார்.

வழிப்பறி சம்பவம் நடந்த பகுதியில்தான் டில்லி ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன.
வி.ஐ.பி.க்கள் நிறைந்த பகுதியில் மற்றும் பிரதமர் மோடியின் உறவினரிடமே வழிப்பறி சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமயந்தி பென் மோடியின் புகாரையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க 20 குழுக்களைக் கொண்ட டெல்லி போலீசார் களமிறங்கி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். தமயந்தி பென் மோடி பயணம் செய்த ஆட்டோவை 2 நபர்களும் 15 நிமிடங்களாக பின்தொடர்ந்தது போலீஸாரின் ஆய்வில் தெரியவந்தது.

அந்த 2 நபர்களையும் போலீசார் கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கண்டுபிடித்தனர். 2 பேரில் ஒருவரை மட்டும் கண்டுபிடித்த டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் நோனு என்பதும் அவரிடம் இருந்து 50,000 ரூபாய் மற்றும், 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நோனுவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory