» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மன்மோகனை பார்த்து பொருளாதாரத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: நிர்மலா சீதாராமனின் கணவர்

திங்கள் 14, அக்டோபர் 2019 5:50:10 PM (IST)

பொருளாதாரத்தில் மன்மோகனை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் கருத்தால், பாஜகவுக்கு பெரிய தர்ம சங்கடம் உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர். இவர் நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றுதான் பாஜக அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை உருவாகியுள்ளது. அவர் தனது கட்டுரையில், பாஜகவால் சொந்தமாக எந்த ஒரு பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்க இயலாது. நரேந்திர மோடி அரசானது தங்களது முன்னோடிகளாகிய  முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்ன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார மாதிரிகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக அரசானது பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்த மட்டில் அது சரி இல்லை, இது சரி இலலை என்று மற்றவர்களைக் கூறி வருகிறதே தவிர, தனது சுயமான பொருளாதாரக் கொள்கை எதுவென்பதை உணரவில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்னும் ஒருவாரத்தில் ஹரியாணா மற்றும் மஹாராஷ்டிர மாநில தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சரின் கணவரின் இந்த விமர்சனமானது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி இதனை வெகுவாக வரவேற்றுப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

e.rajaOct 15, 2019 - 02:12:57 PM | Posted IP 162.1*****

vunmay

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory