» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோசமான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து

செவ்வாய் 15, அக்டோபர் 2019 10:27:51 AM (IST)

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது. என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி அவரின் மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேஷன் சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நேற்று நிருபர்களுக்கு அபிஜித் பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று வருகிறது. பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு உணர்வதும் அதிகரித்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக எவ்வாறு பணியாற்றப் போகிறார்கள் என்பதைக் காட்டிலும், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே முக்கியம். அதைப்பற்றித்தான் என்னால் கூற முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory