» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் : பிரதமர் மோடி

செவ்வாய் 15, அக்டோபர் 2019 5:12:17 PM (IST)

இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஹரியாணாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சர்கி தாத்ரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  பிரதமர் மோடி பேசியதாவது, தேர்தல் பிரசாரத்துக்காக நான் ஹரியாணா வரவில்லை. நான் பாஜக-வுக்காக வாக்கு சேகரிக்க வரவில்லை. ஹரியாணா மக்களிடம் நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆனால், ஹரியாணா மக்களாகிய நீங்களே என்னை இங்கு அன்புடன் அழைத்துள்ளீர்கள். உங்கள் அன்பு கோரிக்கைக்குப் பின் நான் இங்கு வருவதை என்னாலேயே தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அளவில்லா அன்பை நீங்கள் எனக்கு பரிசளித்துள்ளீர்கள். 

நாம் இம்முறை ஒளியுடனும், தாமரையுடனும் இரு வகையான தீபாவளியை கொண்டாடவுள்ளோம். இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும். அப்போது அவர்களின் திறமையையும், சாதனைகளையும் பாராட்டி கொண்டாட வேண்டும். ஏனென்றால் ஹரியாணா மக்களாகிய நீங்கள் முன்வரவில்லை என்றால் செல்ல மகள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். சமீபத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான எனது சந்திப்பின் போது, அவர் டங்கல் திரைப்படம் பார்த்ததாகவும், அதில் இந்திய மகள்களின் திறமை போற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை கேட்டவுடன் ஹரியாணாவை நினைத்து பெருமையுற்றேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory