» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு

செவ்வாய் 15, அக்டோபர் 2019 5:26:14 PM (IST)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சிதம்பரத்தை நாளை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.
 
இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டார். இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க  டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திகார் சிறையில் இருந்து காவலர்கள் ப.சிதம்பரத்தை வாகனத்தில் ஏற்றி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். 

அப்போது, ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.  திகார் சிறைக்கு அமலாக்க துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்துள்ளது. அவரை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிப்பதோ அல்லது கைது செய்வதோ அவரின் கண்ணியம் சார்ந்த விசயம் ஆகாது என்றும் அமலாக்க துறையினரிடம் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்யவும் விசாரிக்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory