» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

வியாழன் 17, அக்டோபர் 2019 3:27:54 PM (IST)

கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் இதுவரை ரூ.33 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் நிறுவி ஆன்மிக பணிகளை செய்துவருகிறார். கல்கி ஆசிரமத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

கல்கி பகவான் விஜயகுமார் மீது, பக்தர்களுக்கு போதை பொருட்களை கொடுத்ததாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டை நடத்தினார் என்றும் புகார் எழுந்தது. இந்நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து 40 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசிரம அலுவலகம், திருவள்ளூர் நேமத்தில் உள்ள ஆசிரமம், ஆந்திர மாநிலம், கோவர்த்தனபுரம் கல்கி ஆசிரமம், தெலுங்கானாவில் உள்ள ஆசிரமம் மற்றும் என்.கோபிகிருஷ்ணாவின் தொழில் நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடந்தது.

விடிய விடிய நடந்த இந்த சோதனை இன்று 2வது நாளாக சோதனை நீடித்து வருகிறது. கல்கி ஆசிரமம் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள கணக்கு வழக்குகள், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி சோதனை செய்து வருகின்றனர். என்.கே.வி. கிருஷ்ணாவின் தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது. கணக்கில் வராத பணத்தை நிலம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த சோதனையில் இதுவரை ரூ.33 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சோதனை நீடித்து வருவதால் இன்னும் அதிக தொகை பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory