» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க காங்கிரஸ் முயற்சி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

வியாழன் 17, அக்டோபர் 2019 5:13:47 PM (IST)

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக மாற்ற காங்கிரஸ் முயல்வதாக மத்திய பாத்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று நோக்கத்தில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பவானி கேரா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் பேசிய ராஜ்நாத் சிங், ”சமீபத்தில் லண்டனில் லேபர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பைனை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில், காஷ்மீரில் நடத்தப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து கலந்துரையாடினர்.

நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். காஷ்மீரில் எங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன?. காஷ்மீரில் தீவரவாத செயல்கள் அரங்கேறும்போது மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அது குறித்து ஏன் அப்போது பேசப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார், "எனக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பதில் வேண்டும். காஷ்மீர் விவகாரம், உள் விவகாரம். அதைப் பற்றி ஏன் மற்ற நாடுகளுடன் பேசவேண்டும்? பிற நாடுகளுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பது சரியா?. சர்வதேச பிரச்சனையாக காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ் அணுகுகிறது” என்று ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory