» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 17, அக்டோபர் 2019 8:07:35 PM (IST)

ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு பதிவு  செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்தை 15 நாள் விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 7 நாள் விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Oct 18, 2019 - 09:55:53 AM | Posted IP 108.1*****

பிதுக்கி எடுக்க எதுக்கு ஏழு நாள். ஒரு நிமிஷம் போதுமே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory