» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விடுதலைப்புலிகளுக்குத் தடை நீட்டிப்பு விவகாரம்: தீர்ப்பாயத்தில் வைகோ ஆஜர்

சனி 19, அக்டோபர் 2019 11:45:32 AM (IST)

விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தில் வைகோ 2ஆவது நாளாக ஆஜரானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 -ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து அதன் செயல்பாடுகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த மே 13 -ஆம் தேதியுடன் தடை முடிவடைந்த நிலையில் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் வரை மேலும் 5 ஆண்டுகளுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த அறிவிப்புக்கு ஆட்சேபம் இருந்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாய விசாரணையின் போது தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிப்பு தொடா்பாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீா்ப்பாயம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அரசு விருந்தினா் மாளிகையில் 4 நாள்கள் நடைபெறும் விசாரணைக்கு புதுதில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமை வகிக்கிறார். இந்நிலையில் விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தில் வைகோ 2ஆவது நாளாக இன்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

முன்னதாக நேற்று விசாரணை முடிவடைந்ததை அடுத்து செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியதாவது: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக விசாரணையில் நான் பங்கேற்றுள்ளேன். எனது கருத்தை எடுத்து வைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி உறுதி அளித்துள்ளாா். தீா்ப்பாய விசாரணையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவா் உருத்திர குமாரன் சாா்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் பாரிவேந்தனும் ஆஜராகியுள்ளாா்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடா்ந்து நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அதனால்தான் தடைக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று இருந்ததை 5 ஆண்டுகள் என்று அரசு மாற்றியது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை அா்த்தமற்றது. எனவே தடையை நீக்க வேண்டும் என்று வாதிடுவோம். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் செய்யாத தவறுக்காக 7 தமிழா்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை விடுவிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். எனவே 7 தமிழா்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து

இவன்Oct 19, 2019 - 11:49:41 AM | Posted IP 162.1*****

தெலுங்கு அரசியல் வியாபாரி நாய் பேட்டி கோபால்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory