» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கமலேஷ் படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டால் மகன்களுடன் தீக்குளிப்பேன் : மனைவி கண்ணீர்!!

சனி 19, அக்டோபர் 2019 12:23:01 PM (IST)

எனது கணவரின் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், எனது இரு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கமலேஷ் திவாரியின் மனைவி கிரண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்ளெவில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரி (45) படுகொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவா்களில் இருவா், முகமது முஃப்தி நயீம் காஸ்மி, இமாம் மெளலானா அன்வருல் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கை விசாரிக்க சிறப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனா். 

கமலேஷ் திவாரி கொலைக்கு, அகில பாரதிய ஹிந்து மகாசபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனது இரு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கமலேஷ் மனைவி கிரண் தெரிவித்துள்ளார். தனது கணவர் மரணத்தில் அரசு அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டது. கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்து பாதுகாப்பு வழங்கக் கோரியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே எனது கணவரின் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், எனது இரு மகன்களுடன் நானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கிரண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கமலேஷ் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவரது இரு மகன்களுக்கும் அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கமலேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர வேண்டும் அதுவரை அவரது உடலை நாங்கள் எடுக்கப்போவதில்லை என கமலேஷின் உறவினர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory