» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தவறான கொள்கைகளால் நாட்டை நாசமாக்கி விட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு

ஞாயிறு 20, அக்டோபர் 2019 9:32:17 AM (IST)

தவறான கொள்கைகளால் நாட்டை காங்கிரஸ் கட்சி நாசமாக்கி விட்டது என்று ஹரியான மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஹரியாணா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு கடைசி பிரச்சார நாளான சிறு நகரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேரணி ஒன்றில் பேசினார். இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த அரசியல் சட்ட விதி 370 தற்காலிகமானது. ஆனால் தற்காலிகமான அந்த விதியை ஒன்றும் செய்யாமல் காங்கிரஸ் கட்சி அப்படியே விட்டுவிட்டது. எழுபது ஆண்டுகளாக அந்த விதி தொடர்ந்து அமலில் இருந்தது. இரண்டாவது முறை பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் நான் அந்த தற்காலிக விதியை ரத்து செய்தேன். எனக்கு ஐந்தாண்டு காலத்துக்கு நீங்கள் நிரந்தரமாக ஆட்சிப்பொறுப்பை வழங்கி இருக்கிறீர்கள். இந்நிலையில் நான் ஏன் ஒரு தற்காலிக விதி நிரந்தரமாகத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். 

அரசியல் சட்ட விதி 370 காரணமாக 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த தங்கள் சொந்த வீடுகளை, சொந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என மோடி குறிப்பிட்டார். இதேபோலத்தான் கர்தார்பூர் தாழ்வாரப் பிரச்சனைகளும். இந்த பிரச்சினை விஷயத்திலும் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக கர்தார்பூர் திசை நோக்கி சீக்கிய பக்தர்கள் வணங்கி வந்தார்கள்.அதற்குப் பிறகு குருத்வாராவை நோக்கி தங்களுடைய பைனாகுலரை திருப்பிப் பார்த்து தரிசனம் செய்து வந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இப்பொழுது தாழ்வாரம் துவக்கப்பட உள்ளது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது கர்தார்பூர் சாஹிப் ஆலயத்தை இந்தியாவுடன் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது மாபெரும் தவறு. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


மக்கள் கருத்து

உண்மைOct 20, 2019 - 03:20:25 PM | Posted IP 162.1*****

தங்களுடைய தவறான கொள்கைகளால்தான் நாடு இப்போது சீரழிந்துகொண்டிருக்கிறது .. .தவறாக சொல்லாதீர்கள்

உண்மைதான்Oct 20, 2019 - 01:24:50 PM | Posted IP 162.1*****

ஆட்சியில் இருக்கும்போதே உருப்படியாக செய்யாமல் ... காங்கிரஸ் மேல பழிபோடுவது தான் வேலையா போச்சு ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory