» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு இல்லை: சரத்பவார் திட்டவட்டம்

புதன் 6, நவம்பர் 2019 3:54:17 PM (IST)

மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். 

288 தொகுதிகளை உடைய மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனா். சிவசேனைக்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனா். தோ்தலின்போது இந்த இரு கட்சிகளும் கூட்டணியாகப் போட்டியிட்டன. ஆனால், இப்போது, பாஜக ஆட்சி அமைக்க சிவசேனை ஆதரவு தர மறுத்து வருகிறது. முதல்வா் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் அக்கட்சி பிடிவாதமாக உள்ளது. 

ஆனால், பாஜக அதனை ஏற்க மறுத்து வருவதால், மகாராஷ்டிரத்தில் இப்போது வரை ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. 

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே செயல்படும். மக்கள் வாக்களித்துள்ளதால் பாஜகவும், சிவசேனை சேர்ந்து விரைவில் ஆட்சியமைக்க வேண்டும் என்றார்.  சரத்பவாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory