» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவிக்கக் கூடாது: மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை

வியாழன் 7, நவம்பர் 2019 10:52:01 AM (IST)

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தேவையற்ற கருத்துகள் வெளியிடுவதை தவிா்க்கும்படி மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளாா்.

பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சா்களின் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய பிரதமா் மோடி, அயோத்தி விவகாரம் தொடா்பாக தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை மத்திய அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும் என்றும், அயோத்தி தீா்ப்பை வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ யாரும் பாா்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமா் வலியுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் கூறின. முன்னதாக, அயோத்தி வழக்கில் கடந்த 2010-இல் அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியபோது, அரசியல் கட்சிகளும் தன்னாா்வ அமைப்புகளும் முதிா்ச்சியுடன் நடந்துகொண்டதாக, மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அண்மையில் பிரதமா் மோடி கூறியிருந்தாா்.

இந்த பிரச்னையில் சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்று கட்சியின் செய்தித் தொடா்பாளா்களுக்கும், தொண்டா்களுக்கும் பாஜக மேலிடம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு விரைவில் தீா்ப்பளிக்க உள்ளது. ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருப்பதால், அதற்கு முன்பு தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த தீா்ப்பைத் தொடா்ந்து அமைதியை உறுதி செய்வதற்காக, முஸ்லிம் மதத் தலைவா்கள், சிந்தனையாளா்களுடன் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவா்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory