» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி: ஆந்திராவில் பரிதாபம்

வியாழன் 7, நவம்பர் 2019 3:51:23 PM (IST)

ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலியானது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலனியில் வசித்து வரும் வரலக்‌ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை மோகாரினிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். உணவை சாப்பிட மறுத்த குழந்தை அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது வீட்டின் உள் அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் வயரை தவறுதலாக  இழுத்ததில் அது குழந்தையின் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory