» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோகன் பகவத் - உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை: சிவசேனா தகவல்

வியாழன் 7, நவம்பர் 2019 5:31:01 PM (IST)

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடையில் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலாவுடன், சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்கப்படவேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால் மகாராஷ்டிர மாநில அரசியலில் குழப்பம் நீடித்து வருகின்றது.

எனினும், மகாராஷ்டிராவில் பாஜக விரைவில் புதிய ஆட்சியமைக்கும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டியது. எனினும், சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கை விரித்தார். இதனால், மகாராஷ்டிரா அரசியல் சூழலின் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ”சிவசேனா கட்சி எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வேறு பக்கத்திற்கு செல்ல மாட்டார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,”ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையிலான சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கவில்லை” என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory