» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் : ஹோட்டலுக்கு சேனா எம்.எல்.ஏ.க்கள் மாற்றம்

வியாழன் 7, நவம்பர் 2019 7:54:38 PM (IST)

மகாராஷ்டிரா ஆளுநரை பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ள நிலையில், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருக்கும் ரங்ஷர்டா என்ற ஓட்டலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தங்க வேண்டும் என்று அந்தக் கட்சின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த இரு கட்சிகள் இடையே ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் இழுபறி நீடித்து வருகிறது.இந்த நிலையில் எந்த சட்ட சிக்கலும் ஏற்படாமல் இருப்பது குறித்து இன்று ஆளுநரை பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டேல் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனா எம்.எல்.ஏ. குலாப்ராவ் கூறுகையில், சிவசேனா தலைவரை சந்தித்தோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு நாங்கள் அனைவரும் ஓட்டல் ரங்ஷர்டாவில் தங்கி இருப்போம். எங்களது தலைவர் உத்தவ் தாக்கரே எங்களை என்ன செய்யச் சொல்கிறாரோ அதை செய்வோம் என்றார்.சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக நேற்று உத்தவ் தாக்கரே கூறியிருந்த நிலையில் இன்று அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory