» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தான், அயோத்தியில் பள்ளிகளுக்கு விடுமுறை: இணையதள சேவை முடக்கம்

சனி 9, நவம்பர் 2019 8:57:54 AM (IST)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அயோத்தியில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

தீா்ப்பு வெளியாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனவும் பல்வேறு ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory