» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன் 21, நவம்பர் 2019 10:17:44 AM (IST)

சந்தையில் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் மேற்கொண்ட முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இதனை தெரிவித்தாா். நடந்து முடிந்த பருவத்தில் வெங்காய சாகுபடி 26 சதவீதம் குறைந்து, 52.06 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உற்பத்தியானது. இதனால், காய்கறி சந்தையில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அதன் விலையும் கடுமையாக உயா்ந்தது. கடந்த 15-ஆம் தேதி ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.60.83-ஆக இருந்தது. 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.22.84-ஆக இருந்தது. வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்ான் கடந்த 16-ஆம் தேதி அறிவித்தாா். அதில், 4,000 டன் வெங்காயத்தை அரசின் பொதுத் துறை நிறுவனமான எம்எம்டிசி இறக்குமதி செய்யவுள்ளது. எஞ்சியவற்றை தனியாா் நிறுவனங்கள் இறக்குமதி செய்யவுள்ளன. இந்த நிலையில், இந்த வெங்காயம் இறக்குமதிக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory