» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

வியாழன் 21, நவம்பர் 2019 12:05:56 PM (IST)

தனிநபா்கள் பயன்படுத்தும் முகநூல் போன்ற சமூகவலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என தகவல் தொழில்நுட்ப அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

தனிநபா்களின் சமூகவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முன்மொழிகிறதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூா்வமாக ரவிசங்கா் பிரசாத் அளித்த பதில்: தனிநபா் குறித்த விவரங்கள் மற்றவா்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே ஆதாா் எண் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிநபா்களின் சமூகவலைதள கணக்குகளுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் திட்டமேதும் மத்திய அரசிடம் இல்லை.

ஆதாா் தரவுத்தளத்தைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட நபரால் பதிவுசெய்த அல்லது புதுப்பித்தலின்போது வழங்கும் தகவல்கள் மட்டுமே உள்ளன. இதுதவிர செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல், ஆதாரில் பதிவுசெய்யப்பட்டவரின் பெயா், முகவரி, பாலினம், பிறந்த தேதி/ வயது, புகைப்படம் மற்றும் முக்கிய பயோமெட்ரிக்ஸ் (10 கைவிரல்களின் ரேகைகள் மற்றும் 2 கருவிழி ஸ்கேன்) உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) ஆதாா் எண்ணைப் பெற உரிமை உண்டு என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory