» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி?

வியாழன் 21, நவம்பர் 2019 3:45:00 PM (IST)

மகாராஷ்டிராவில், சிவசேனையுடன் ஆட்சி அமைத்தபின், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் அதனால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக ஏற்காததால், சிவசேனாவை ஆளுநர், ஆட்சி அமைக்க அழைத்தார். பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி தன்னிடம் தெரிவிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால், எந்த கட்சியாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்சியமைக்க முன் வராததால், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

எனினும், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசி இறுதிகட்ட முடிவுவை எடுக்கவுள்ளனர்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில், முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்வது என்றும், அதில் முதல் இரண்டரை வருடங்கள் சிவசேனைக்கும், இரண்டாவது இரண்டரை வருடங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கூட்டத்தில், அஜித் பவார், நவாப் மாலிக், ஜெயந்த் பட்டில், சுனில் தாத்கரே, சாகன் புஜ்பால் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory