» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..!

வெள்ளி 22, நவம்பர் 2019 11:43:30 AM (IST)

இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் என்ற இளைஞர் பெறவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் மானசரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங்(21).  இவர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது ஐந்தாண்டு சட்டப்படிப்பான எல்.எல்.பி படிப்பை கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நீதித்துறை சேவைகள் தேர்வில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 23- இல் இருந்து 21-ஆக குறைத்தது.

இதையடுத்து 2018 ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தேர்வின் நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். இதையடுத்து விரைவில் பதவியேற்க உள்ளார்.  இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதியான இளைஞர் என்ற சிறப்பை மயங்க் பிரதாப் சிங் பெறவுள்ளார். 

இது குறித்து, மயங்க் பிரதாப் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு நல்ல நீதிபதியாக செயல்படுவதற்காக, ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் 2018 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் 12 முதல் 13 மணி நேரம் தொடர்ந்து படித்து வந்ததாகவும், என் பெற்றோரும் எனக்கு உதவியாக இருந்தனர்.  ஒரு நல்ல நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த சக்திகளுக்கு எளிதில் ஆளாகாமல், ஆள் பலம், பண பலத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory