» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் சிவசேனை கூட்டணி ஆட்சி 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது: நிதின் கட்கரி!

வெள்ளி 22, நவம்பர் 2019 4:28:02 PM (IST)

மகாராஷ்டிராவில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சியமைத்தாலும் அது 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து சிவசேனை தலைமையில் மூன்று கட்சிகளும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஐந்து ஆண்டுகள் சிவசேனைக்கு முதல்வர் பதவியை வழங்க காங்கிரஸ் மற்றும் என்சிபி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சிவசேனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனை ஆட்சி அமைத்தாலும் அது 6 முதல் 8 மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மூன்று கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளை கடைபிடிப்பதால் கூட்டணி ஆட்சி நீடிக்காது என்று கூறினார். 

மேலும் அவர், இந்த கூட்டணிக்கு சந்தர்ப்பவாதம் மட்டுமே அடிப்படை. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் இணைகின்றன. இந்த கூட்டணி அரசு அமையுமா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. அப்படியே ஒருவேளை அமைந்தாலும், 6 முதல் 8 மாதத்திற்கு மேல் நீடிக்காது. கிரிக்கெட்டிலும் சரி, அரசியலிலும் சரி எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஹிந்துத்துவா அடிப்படையிலே பாஜக, சிவசேனையுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், எங்களால் முடிந்தவரை  முயன்றோம். கூட்டணியின் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory