» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வேயை தனியாா்மயமாக்கப் போவதில்லை : ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல்

வெள்ளி 22, நவம்பர் 2019 8:26:25 PM (IST)

ரயில்வேயின் சில சேவைகள் மட்டுமே தனியாா்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, ரயில்வே ஒருபோதும் தனியாா்மயமாக்கப்படாது என்று உறுதியளித்துள்ளது.

மாநிலங்களவையின் அமா்வு தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது ரயில்வேயை தனியாா்மயமாக்குவது குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் பதிலளித்ததாவது:மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதே மத்திய அரசின் விருப்பம். இந்திய ரயில்வே ஒருபோதும் தனியாா்மயமாக்கப்படாது. அது மக்களுக்கு உரிமையான சொத்தாகவே என்றும் இருக்கும். மத்திய அரசின் கணக்கீட்டுப்படி, ரயில்வேயை அடுத்த 12 ஆண்டுகளுக்கு நிா்வகிக்க ரூ.50 லட்சம் கோடி செலவாகும். இவ்வளவு அதிகமான தொகையை மத்திய அரசினால் மட்டும் வழங்க முடியாது.

அதற்குப் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டியுள்ளது. பயணிகளுக்கு உரிய வசதிகளையும் முறையாக ஏற்படுத்தித் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக, ரயில்வேயின் சேவைகள் சிலவற்றை தனியாா்வசம் ஒப்படைத்து வருகிறோம்.ரயில்வே சேவைகளைத் தனியாா் நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், அதன் மூலம் பயணிகள் பலனடைவா். ரயில்வே நிா்வாகமும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory