» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் பட்னாவீஸ் பதவியேற்பு திட்டமிட்ட நாடகம்: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

திங்கள் 2, டிசம்பர் 2019 12:32:42 PM (IST)

மகாராஷ்டிராவில் ரூ.40 ஆயிரம் கோடி மத்திய நிதியை பாதுகாக்கத்தான் பட்னாவிஸ் 2வது முறையாக முதல்வரானார். நன்கு திட்டமிட்டுதான் நடத்தப்பட்ட நாடகம் என்று பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜக, சிவசேனா இடையிலான கூட்டணி, முதல்வர் பதவியை பிரித்துக்கொள்வது தொடர்பாக எழுந்த முரண்பாடுகளால் முறிந்தது. இதனால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைக்க முயன்றன.

இப்படி இருக்க, எதிர்பாராத சூழலில் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணையுடன் பெரும்பான்மை இல்லாத சூழலிலும் தேவேந்திர பட்னாவிஸ் 2வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 80 மணிநேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்று பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள எல்லப்பூர் எனும் இடத்தில் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசுகையில்,”மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், 2வது முறையாக முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்று 80 மணி நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகம் எதற்காக நிகழ்த்தப்பட்டது தெரியுமா. எங்களுக்குப் பெரும்பான்மை அவையில் கிடையாது, நிரூபிக்க முடியாது எனத் தெரிந்த பின்பும் ஏன் பட்னாவிஸ் முதல்வரானார்?. இது அனைவரின் மனதிலும் எழும் பொதுவான கேள்விதான்

மகாரஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் மத்திய நிதி ரூ.40 ஆயிரம் கோடி உள்ளது. ஒருவேளை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், ரூ.40 ஆயிரம் கோடியை நிச்சயம் மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், பல்வேறு விஷயங்களுக்கும் சுயலாபத்துக்கும் பயன்படுத்துவார்கள்.இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ள தகவல் அறிந்ததும், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதனால்தான் பட்னாவிஸ் பதவியேற்கும்போது சில அட்ஜஸ்மென்ட் செய்யப்பட்டது.

அதன்பின் பதவி ஏற்று 15 மணிநேரத்துக்குப்பின், பட்னாவிஸ் முறைப்படி அந்த பணத்தைப் பாதுகாத்துவிட்டார். அந்த பணம் அனைத்தும் மீண்டும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. அந்த பணம் இருந்தால், அடுத்துவரும் முதல்வர் அந்த பணத்தை என்ன செய்வார் என உங்களுக்குத் தெரியும்” என்று அனந்தகுமார் ஹெக்டே பேசினார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

சாமிDec 2, 2019 - 02:29:45 PM | Posted IP 49.20*****

நன்று

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory