» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிரத்தில் பெண்களுக்கு இலவச கல்வி : சட்டமன்றத்தில் ஆளுநர் அறிவிப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 3:42:48 PM (IST)

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்க கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க தவறிய காரணத்தினால் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து மகாராஷ்டிர விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து அரசு அமைத்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றதைத்தொடர்ந்து மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு சபைகளின் கூட்டு கூட்டம் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் மகாராஷ்டிர ஆளுநர் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கலந்துகொண்டு பேசினார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கூட்டணி அரசின் செயல் திட்டம் குறித்து மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி விளக்கிப் பேசினார். ஆளுநர் மராத்திய மொழியில் ஆற்றிய உரை சட்டமன்ற உறுப்பினர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. ஆளுநர் உரை விவரம் வருமாறு:

80 சதவீதப் பணிகள் ஒதுக்கீடு

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்பொழுது வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனியார் நிறுவனங்களின் 80 சதவீத பணியிடங்களை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டம் இயற்ற கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

10 ரூபாய்க்கு சாப்பாடு

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் எப்பொழுதும் பசியில்லாமல் உணவு சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு இணங்க பத்து ரூபாய்க்கு உணவு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் நோயால் அவதிப் பட கூடாது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலவு குறைவான தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை  அமைக்க கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில விவசாயிகள் அனைவரும் காலம் தவறிப் பெய்த கடும் மழை காரணமாக தங்கள் காரீப் பருவ பயிர் விளைச்சலை இழந்து தவிக்கும் நிலையில் உள்ளனர். மகாராஷ்டிர கூட்டணி அரசு இந்த நிலையினை நன்கு உணர்ந்துள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டத்தை கூட்டணி அரசு தயாரித்து வருகிறது என ஆளுநர் தெரிவித்தார்.

பெண்களுக்கு இலவச கல்வி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்க கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக முக்கிய நகரங்களில் எல்லாம் விடுதிகள் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஐடி நிறுவனங்கள் பிற தொழில் துறை நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக அரசு சேவைகளை எளிமைப்படுத்தும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் ஆணையை முழுமையாக அமல்படுத்த மகாராஷ்டிர அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஆளுனர் அறிவித்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற வகுப்பினர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கூட்டணி அரசு முயற்சிகளை மேற்கொள்ளும். அங்கன்வாடி தொழிலாளர்கள் ஆஷா தொழிலாளர்கள் ஆகியோரது பிரச்சினைகளுக்கும் இணக்கமான தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர தொழில்துறை மற்றும் பொருளாதாரம் உண்மையில் இத்தகைய நிலைமையில் உள்ளது என்பது மக்களுக்கு விளக்குவதற்கான ஒரு அறிக்கையை விரைவில் தயாரித்து அரசு தரப்பில் வெளியிடப்படும் எனவும் ஆளுனர் பகத்சிங் கோஷியாரி  குறிப்பிட்டார்.  சட்டமன்ற கூட்டுக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு கூட்டணி அமைச்சர்களுக்கும் ஆளுநருக்கும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

சாமிDec 3, 2019 - 04:08:14 PM | Posted IP 49.20*****

அற்பாயுசு என்பது நன்கு தெரிந்து - இந்த மிகை வேக ஓட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory