» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கர்நாடகாவில் கைது

செவ்வாய் 14, ஜனவரி 2020 4:52:58 PM (IST)

களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு - கேரளா எல்லையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் ஜனவரி 8-ம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் இன்று காலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கர்நாடக போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் விரைவில் தமிழ்நாட்டுக்கு  கொண்டு வரப்பட உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory