» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டில் வேலைஇல்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் கொதித்தெழுவார்கள்: ப.சிதம்பரம் எச்சரிக்கை

செவ்வாய் 14, ஜனவரி 2020 4:54:52 PM (IST)

நாட்டில் தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வந்தால் இளைஞர்கள் கோபத்தில் கொதித்தெழுவார்கள் என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசை எச்சரித்துள்ளார்

இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசை கடுமையாக சாடி ப.சிதம்பரம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த சூழ்நிலையில் நாட்டில் வேலைவாய்ப்புகளும் வருவாயும் குறைந்தால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுவார்கள்.

நாட்டில் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அரசு வெளியிட்ட தகவலின் படி உணவு பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் ஒரேயடியாக 7.35 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது.கடந்த 2014ம் ஆண்டு மோடி அரசு துவங்கிய போது சில்லறை பணவீக்கம் 7.39 சதவீதமாக இருந்தது. தற்போது 7.35 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் மோசமான நிதி நிர்வாகம் தான் இதற்கு காரணம் என ப.சிதம்பரம் சாடினார். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் வெறும் 2.11 சதவீதமாக இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 5.54 சதவீதமாக ஆக அதிகரித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory