» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் -மோகன் பகவத் வலியுறுத்தல்

சனி 18, ஜனவரி 2020 5:33:21 PM (IST)

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) நிறுவனத்தில்  உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கூறியதாவது: நாட்டின் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இது காலத்தின் தேவை என்று நாங்கள் உணர்கிறோம். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பையும் கொண்டிருக்காது,  அனைவருக்கும் பொருந்தும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு மக்கள் தொகை வளர்ச்சியின் கட்டுப்பாடற்ற  தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory