» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு திட்டம்

சனி 25, ஜனவரி 2020 10:24:45 AM (IST)

வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக வாக்காள அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களும் ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது இருக்கும். இதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் செய்து வருகிறது. இதற்கான சட்டவரைவு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முன் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின், அந்த சட்டவரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையோடு, ஆதார் எண்ணையும் இணைக்கும் பட்சத்தில் தனிமனிதர்களின் அந்தரங்கம் பாதுகாக்கப்படும், போலிகள் உருவாவது தடுக்கப்படும். இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகளில் அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இது திருத்த மசோதாவாக அறிமுகமாகும் என நினைக்கிறோம்" எனத் தெரிவித்தார்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், " 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின்படி, வாக்காள் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்பவர்களும், ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், ஆதார் எண்ணை அளிக்கவும், அதிகாரிகள் ஆதார் எண்ணை அவர்களிடம் இருந்து பெறவும் அனுமதிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் பதிவாளர் அதிகாரிகள் ஆதார் எண்ணையும் கேட்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையில் தவறுகள் இன்றியும், ஒரே பெயரில் இருவர் வருவது போன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும். போலியாக உருவாக்கம் செய்வது தடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் சட்ட அமைச்சகம் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory