» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் பிணைத்து வைக்க்பபட்டிருந்த 73 பேர் மீட்பு

சனி 25, ஜனவரி 2020 12:35:12 PM (IST)முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெலங்கானா போலீஸார் தெரிவித்தனர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நகரம் என்ற கிராமத்தில் போதிய பராமரிப்பு இல்லாத முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக தெலங்கானா போலீஸார் கூறுகையில்,நகரம் கிராமத்தில் இயங்கி வந்த அந்த முதியோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலி கொண்டு கட்டி வைக்கப்பட்டு, மனிதாபிமானமன்ற முறையில் நடத்தப்பட்டுள்ளனர். அங்கு போதிய பராமரிப்பு வசதிகளும் கிடையாது. அதிலிருந்து 73 பேர் மீட்கப்பட்டனர். எனவே அதன் உரிமையாளர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory