» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைமுறை: தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி!!

சனி 25, ஜனவரி 2020 12:49:47 PM (IST)

அனைவரும் பங்கேற்கும் வகையிலான தேர்தல் நடைமுறையை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றிகளை தெரிவித்து உள்ளார்.

இந்தியா கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி குடியரசானது.  அதற்கு ஒரு நாள் முன்பு 1950ம் ஆண்டு ஜனவரி 25ந்தேதியில் இருந்து நாட்டில் தேர்தல் ஆணையம் செயல்பட தொடங்கியது.  இதனிடையே, ஜனவரி 25ந்தேதியை கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் தினம் ஆக கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, 

இதுபற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நம்முடைய தேர்தல் நடைமுறையை பல்வேறு முயற்சிகளால் ஆற்றல் நிறைந்த மற்றும் அனைவரும் பங்கேற்க கூடிய வகையில் உருவாக்கிய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன் என தெரிவித்து உள்ளார். ஜனநாயகத்தினை வலிமை அடைய செய்யும், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் வாக்கு சதவீதம் ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் பணியாற்றுவதற்கு இந்த நாளானது அவர்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory