» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.6 கோடி பரிசு: உபி அரசு அறிவிப்பு

சனி 25, ஜனவரி 2020 3:54:30 PM (IST)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனையருக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உபி அரசு அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்லும் உத்தரப்பிரதேச மாநில வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்வோருக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. இதேபோல், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory