» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடனப் பயிற்சியின் போது மாரடைப்பால் 14 வயது சிறுமி மரணம்: கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

சனி 25, ஜனவரி 2020 5:45:24 PM (IST)

கர்நாடகத்தில், கே.ஜி.எப் கிராமத்தில் உள்ள பள்ளியில் நடனப் பயிற்சியின் போது 14 வயது மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம், கொல்லாஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி புஜிதா. இவர் சக மாணவிகளுடன் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார்.  மாணவியை உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் பங்கர்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேஜிஎஃப் நகரத் காவல் கண்காணிப்பாளர் மொஹம்மத் சுஜீதா ஊடகத்துக்குத் தகவலளித்தார். மேலும், இதுகுறித்து தலைமை காவலர் மொஹமத் சுஜீதா கூறுகையில், மாணவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்து விமலா ஹ்ருதயா உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த அறிக்கையை வெளியிடவில்லை. மேலும் மாணவியின் பெற்றோரும் இதுகுறித்து எந்த புகாரும் அளிக்காதது மிகவும் வருத்தமளிக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். 

புஜிதா மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அவரது இதயத்தை துடிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வி அடைந்தன. மேலும், மாணவி மருத்துவமனைக்குக் கொண்டுவரும் போதே உயிரிழந்து விட்டதால், முதலுதவி சிகிச்சைகள் எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை என்று கே.எல். ஜலப்பா மருத்துவமனை தெரிவித்துள்ளது.புஜிதா உயிரிழந்ததையடுத்து, கலாசார நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory