» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்கவும் : மத்திய அரசு வேண்டுகோள்

சனி 25, ஜனவரி 2020 7:26:24 PM (IST)

சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்தியர்கள் யாரும் சீனா செல்ல வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் மும்பையில் இருவர், பெங்களூருவில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர், கேரளாவில் ஏழு பேர் என 11 பேர் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அவர்கள் அந்தந்த மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனிமையாக வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்தியர்கள் யாரும் சீனா செல்வதை தவிர்க்குமாறும், அத்தியாவசியமற்ற சீன பயணத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory